பச்சிளம் குழந்தை பராமரிப்பு
பச்சிளம் குழந்தை பராமரிப்பு:
பச்சிளம் குழந்தைகளால் பொம்மைகளை வைத்து விளையாட முடியாது. அவர்களால் வெளியே சென்று விளையாடவும் முடியாது. அப்போது அவர்களுக்கு எப்படி பொழுது போகும். அவர்கள் விழித்திருக்கும் போது நாம் அவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும். இல்லாவிடில் அவர்கள் செழிப்பாகவும், தனிமையாகவும்
உணர்வார்கள். அதே நேரம் அவர்கள் தொட்டிலில் முழித்துக்கொண்டு அமைதியாக
படுத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாம் அவர்களை தனியாக தவிக்க விட்டு
விட்டோமே என்ற குற்ற உணர்வு உங்களுக்கு வரத் தேவையில்லை. குழந்தைகள் பெரும்பாலான நேரங்களில் ஓய்வெடுக்க நினைத்து அமைதியாக இருக்கலாம்.
குழந்தைகளை குளிக்க வைப்பது, சாப்பிட வைப்பது, அரவணைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு
அவர்களுக்கு முக்கியமானது நமது நேரம். ஏனெனில் பெரியவர்களுடன்
பொழுதை கழிப்பதை அவர்கள் விரும்புவார்கள். பெரியவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களை பெரும்பாலும் இருக்குமாறு பார்த்துக்
கொள்ளுங்கள்.
நீங்கள் புத்தகம் படிக்கும் போதோ தொலைக்காட்சி பார்த்துக்
கொண்டிருக்கும் போதோ அவர்களை உங்கள் அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தால் கூட அவ்வப்போது சிறு உரையாடல்களை
வைத்துக்கொள்ளுங்கள். முடிந்த வரை நீங்கள் வெளியில் செல்லும்போது அவர்களையும்
அழைத்து செல்லுங்கள். வெளிஉலகம் அவர்களுக்கு புது உணர்வை கொடுக்கும். அவர்கள்
காணும் காட்சிகளும், கேட்கும் சப்தங்களும் அவர்களுக்கு புது உணர்வை கொடுக்கும்.
அவர்களுக்கு அது ஒரு புது திரைப்படத்தை பார்ப்பதை போன்று சுவாரசியமாக இருக்கும்.
இது அவர்களுக்கு புது உணர்வை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் நீங்கள் மளிகை கடைக்கு செல்லும்போது தோட்ட வேலைகள் செய்யும்போது என்று
சிறுசிறு வேலைகளின் போது அவர்கள் உங்களை தேடி அலையாமல் இருக்க செய்யும்.
முடிவாக அவர்களை வீட்டில் சுவாரஸ்யமான இடங்களில்
இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவர்களால், அவர்களிடமிருந்து ஒரு அடிக்குமேல்
எதையும் மிக விரிவாக பார்க்க முடியாது. ஆனால் அவர்களால் சன்னல் துணி அசைவது,
சுவற்றில் ஆடும் நிழல் போன்றவற்றை பார்த்து மகிழ முடியும். புதிய காற்றை உணர
முடியும். இப்படி செய்வதன் மூலம் நாம் நம் குழந்தைகளுக்கு சுவாரசியமான மற்றும்
புதிய பல்வேறு விஷயங்களை பார்க்கும் சூழலை உருவாக்குகிறோம்.


Comments
Post a Comment